சுசீந்திரன் இயக்கத்தில் ஜெயம் ரவி…?

1446888839-2855தனி ஒருவன் வெற்றிக்குப் பிறகு ஜெயம் ரவிக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது. ஏ.எல்.விஜய் ஜெயம் ரவியை வைத்து படம் இயக்குகிறார் என தகவல் வெளியாகி ஜெயம் ரவி அதனை மறுத்திருந்தார்.

அத்துடன், சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் மிருதன் படத்திலும், பிரபுதேவா தயாரிப்பில் லக்ஷ்மண் இயக்கும் படத்திலும் நடிக்கயிருப்பதாகவும், இதுதவிர வேறு எந்தப் புதுப்படத்துக்கும் கால்ஷீட் தரவில்லை என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், சுசீந்திரன் ஜெயம் ரவியை வைத்து படம் இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு படம் தயாரிப்பில் இருக்கும் போதே, அடுத்தப் படத்தை முடிவு செய்துவிடுவது சுசீந்திரனின் வழக்கம். அப்படித்தான் அவரது வண்டி தோல்விகளை தாண்டிக் குதித்து இதுவரை ஓடிவந்தது.

பாயும் புலி ஹிட்டாகும், அதை வைத்து விஜய், அஜித் போன்ற மாஸ் ஹீரோவின் கால்ஷீட்டை பெறலாம் என்று கணக்குப் போட்டு, அடுத்தப் படத்தை கமிட் செய்யாமல் இருந்தார். விதி வலியது. பாயும் புலி பணாலாக, அடுத்தப் படம் என்ன என்பது இன்னும் முடிவாகாமல் உள்ளது.

இந்நிலையில் தான், ஜெயம் ரவியை சுசீந்திரன் இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. தனி ஒருவனுக்குப் பிறகு ஜெயம் ரவியும் மாஸ் ஹீரோவாகிவிட்டார். சுசீந்திரனின் ஆசை நிராசையாகவில்லை.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries