பரமபத விளையாட்டு – ஆட்டத்தை முதலிலிருந்து தொடங்கும் வெங்கட்பிரபு

1446885023-9923பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி என தொடர்ச்சியாக இரண்டு தோல்வி. அடுத்து என்ன செய்வது என்ற மெகா குழப்பம் வெங்கட்பிரபுக்கு. கடைசியில் அவர் எடுத்திருக்கும் முடிவு… சென்னை 28 பார்ட் டூ.

சென்னை 28 படத்தின் மூலம் இயக்குநராக அழுத்தமான தடம் பதித்த வெங்கட்பிரபு சரோஜா, கோவா, மங்காத்தா என்று அடுத்தடுத்து வெற்றிகளுடன் வேகமாக முன்னேறினார். பிரியாணியும், மாசு என்கிற மாசிலாமணியும் அவர் வேகத்தை கட்டுப்படுத்தி கிட்டத்தட்ட நிறுத்தத்துக்கே கொண்டு வந்துவிட்டன.

இந்நிலையில், சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சிவா இந்தப் படத்தை தயாரிப்பார் எனவும் கூறப்படுகிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online