அர்னால்டை அமெரிக்காவில் சந்திக்கிறார் ரஜினி

1446884213-5099எந்திரன் 2 படம் பாகுபலியின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார் ஷங்கர்.

திரைக்கதையின் வலிமையால் நினைத்ததை சாதித்தார் ராஜமௌலி. ஷங்கரோ ஸ்டார் பவரை நம்புகிறார். எந்திரன் 2 -வில் வில்லனாக அர்னால்டை நடிக்க வைக்க ஷங்கரும், தயாரிப்பு நிறுவனம் லைக்காவும் குறியாக உள்ளன.

அர்னால்ட் எந்திரன் 2 படத்தில் நடிக்க 100 கோடி ரூபாய் கேட்டதாகவும், விரைவில் மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கயிருப்பதாகவும் செய்தி வெளியாயின.

இந்நிலையில், மலேசியாவில் படப்பிடிப்பில் இருக்கும் ரஜினி வரும் 26 -ஆம் தேதி மலேசியாவிலிருந்து அமெரிக்கா செல்கிறார். அங்கு ரஜினியை வைத்து போட்டோஷுட் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த பயணத்தின் போது ஷங்கருடன் ரஜினியும் அர்னால்டை சந்தித்து பேசவிருப்பதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online