பொங்கல் ரேசில் களம் இறங்கும் உள்குத்து

Ulkuthuதிருடன் போலீஸ் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த வெற்றி கூட்டணி தற்போது மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘உள்குத்து’. இதில் தினேஷ் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நந்திதா நடித்துள்ளார். இவர்களுடன் பால சரவணன், ஜான் விஜய், சாயா சிங், ஸ்ரீமன், ‘பாண்டிய நாடு’ சரத், திலிப் சுப்புராயன், மற்றும் சமையல் கலை தாமோதரன் ஆகியோர் நடித்து உள்ளனர்.

விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து, தற்போது இறுதிக் கட்ட பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இப்படத்தை கெனன்யா பிலிம்ஸ் சார்பாக ஜே.செல்வகுமார் தயாரிக்கிறார். கார்த்திக் ராஜு இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் குறித்து கார்த்திக் ராஜு கூறும்போது, ‘உள்குத்து’ கண்களை மட்டுமல்ல, கருத்தையும் கவரும் வண்ணம் படமாக்கப்பட்டு உள்ளது.

கடலின் வண்ணமும், கடல் பாசியின் வண்ணமும் படத்தின் வண்ணத்தையும், கடலை சார்ந்த மனிதர்களின் எண்ணத்தையும் பிரதிபலிக்கும் படமாக இருக்கும். எனது முந்திய படமான ‘திருடன் போலீஸ்’ ஏற்படுத்தி உள்ள அபிப்ராயத்தை இந்தப் படமும் காப்பாற்றும்.

‘உள்குத்து’ படத்தின் பர்ஸ்ட் லுக் ‘ஒரு நாள் கூத்து’ திரைப்படம் ரிலீசாகும் நாளில் வெளி ஆகிறது. ‘உள்குத்து’ இசையை டிசம்பர் மாதம் வெளியிட உள்ளோம். அடுத்த வருடம் பொங்கல் அன்று ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது’ என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries