மிழ் சினிமா விநியோகத்தில் வைகை எக்ஸ்பிரஸ் மிகப்பெரிய புரட்சியை உண்டாக்கும்: ஆர்.கே பேச்சு

http://www.hqpicgallery.in/

மக்கள் பாசறை வழங்கும், ஆர்.கே. நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ’வைகை எக்ஸ்பிரஸ்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஆர்.கே., நடிகை நீது சந்திரா, கோமல் சர்மா, காமெடி டைம் அர்ச்சனா மற்றும் படத்தின் திரைக்கதையாசிரியரும், வசனகர்த்தாவுமான வி.பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் ஆர்.கே பேசும்போது,

வைகை எக்ஸ்பிரஸ் தமிழ்த் திரையுலகின் வியாபார முறையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். படம் எடுக்க ஆறேழு மாதம் கஷ்டப்படும் நாம் அதை வியாபாரம் செய்ய சிந்திக்காமல் தியேட்டருக்கு ஆள் வரவில்லை என்கிறோம். இது என்ன நியாயம்?

ஏர்செல் ஏர்டெல் என செல்போனுக்கு எல்லா நெட் ஒர்க் சிம் கார்டும் எங்கும் எளிதில் கிடைக்கும்படி விநியோகஸ்தர்கள் இருக்கிறார்கள். கடைக்கு கடை விற்கிறார்கள். இப்படி ஒவ்வொன்றுக்கும் பத்து லட்சம் விநியோகஸ்தர்கள் இருக்கிறார்கள். ஏன் சினிமாவுக்கு இருக்ககூடாது?

பத்து பேர் விநியோகஸ்தர்கள் உள்ள சினிமாவுக்கு பத்து லட்சம் பேர் விநியோகஸ்தர்கள் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து உருவானதுதான் இந்த புதிய திட்டம். சினிமாவில் இருக்கிற 10 விநியோகஸ்தர்களும் இப்போது பைனான்சியர் ஆகிவிட்டார்கள்.

சினிமா விநியோகஸ்தர்கள் 10 பேர் இருப்பது ஒரு லட்சமானால் வியாபார முறை மாறும். ஆனால், என்னுடைய ‘வைகை எக்ஸ்பிரஸ்’ திரைப்படத்திற்கு தமிழகத்தில் மட்டும் பத்தாயிரம் விநியோகஸ்தர்களைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளேன். அதற்காக ஆறு மாதங்களுக்கு மேல் உழைத்துக்கொண்டிருக்கிறேன்.

எப்படி என்றால் ஒரு ஊரில் உள்ள ஒரு பகுதி திரையரங்கிற்கு ஆயிரம் டிக்கெட் வாங்குபவர் ஒரு விநியோகஸ்தர் ஆவார். அதே போல் டிக்கெட் வாங்கும் ரசிகர்களுக்கு பயனளிக்கும் வகையில் பத்து டிக்கெட்டுக்கு ஒரு டிக்கெட் இலவசம் என்ற முறையைப் பயன்படுத்துவதின் மூலம் ரசிகர்களின் வரவேற்பு வெள்ளி, சனி, ஞாயிறு தவிர மற்ற தினங்களிலும் அதிகமாகும்.

அதே சமயத்தில் விநியோகஸ்தர்கள் ஆயிரம் டிக்கெட் வாங்கினால் அவர்கள் லாபம் ஈட்டும் வகையில் அவர்களுக்கு தனியாக நூறு டிக்கெட் கமிஷனாக வழங்கப்படும். இது தமிழ் திரையுலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும்.

ஒரு திருட்டு விசிடி விற்கிறவன் அவனது வாடிக்கையாளர்களுக்கு நல்ல தரத்துடன் வீட்டிலேயே சிடியைக் கொடுத்து விட்டு, இது தரமாக இருந்தால் மட்டும் பணம் தருமாறு கேட்டு வாங்குகிறான். திருட்டு விசிடி விற்கும் அவனே அவ்வளவு யோசிக்கும் போது நாம் ஏன் இதை செய்துகாட்ட முடியாது?

இப்போது யாரும் பொருட்கள் வாங்குவதற்கு வெளிய செல்வதில்லை. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அனைத்தும் வீடு தேடி வருகிறது.

அதே போல் நாமும் காலத்திற்கு ஏற்றார் போல் நம் வியாபார முறையிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த விநியோக முறையை வைகை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்கிறேன்.

இது உறுதியாக தமிழ் திரையுலகில் புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை’ என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries