அஜித்தின் அடுத்த படம் மலையாள ரீமேக்

1381140652_arrambam-latest-unseen-stills-4அஜித்தின் ‘வேதாளம்’ தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆகிறது. சுருதிஸாசன், லட்சுமி மேனன் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை சிவா இயக்கியுள்ளார். அனிருத் இசை அமைத்திருக்கிறார். இந்த படம் அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படம் பற்றி தகவல்கள் வெளியாகி உள்ளன. பல்வேறு கதைகளை அஜித் கேட்டார். என்றாலும், மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ‘பாஸ்கர்தி ராஸ்கல்’ படம் அஜித்துக்கு மிகவும் பிடித்து இருப்பதாக கூறப்படுகிறது. வழக்கமாக ரீமேக் படங்களில் அஜித் அதிகமாக நடிப்பது இல்லை.

மலையாளத்தில் மோகன்லால் நடித்த ‘கிரீடம்’ ரீமேக் படத்தில் மட்டும் தான் நடித்து இருக்கிறார். இப்போது மம்முட்டி படத்தின் ரீமேக்கில் நடிக்க ஒப்புக் கொண்டு விட்டதாக தெரிகிறது.

இந்த படத்தை மலையாளத்தில் இயக்கிய சித்திக் இயக்க இருக்கிறார். பாஸ்கர் தி ராஸ்கல்’ படம் மலையாளத்தில் வெற்றி பெற்றதும், இந்தி, தெலுங்கில் ‘ரீமேக்’ செய்ய முன்வந்தனர். இந்தியில் அக்ஷய்குமார், தெலுங்கில் வெங்கடேஷ் ஆகியோரை நடிக்க வைக்கவும் ஏற்பாடு நடந்தது. ஆனால் இயக்குனர் சித்திக் இந்த படத்தில் ரஜினி அல்லது அஜித் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

ரஜினி ‘கபாலி’, தொடர்ந்து ‘எந்திரன்–2’ படங்களில் நடிக்க இருக்கிறார். எனவே அஜித்தும் இந்த படத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். மலையாளத்தில் மம்முட்டி ஜோடியாக நடித்த நயன்தாராவே ஜோடியாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.

அஜித் மருத்துவ சிகிச்சை பெற்ற பிறகு புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று இயக்குனர் சித்திக்குக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries