நகைகள் அணிவதில் ஆர்வம் வந்துள்ளது: அனுஷ்கா

anushkas-jewels-stolen-on-film-setsநடிகை அனுஷ்கா பாகுபலி, ருத்ரமாதேவி படங்களில் ராணி வேடங்களில் நடித்தார். இந்த படங்கள் தமிழ், தெலுங்கு மொழிகளில் சமீபத்தில் வெளியானது. ஆர்யா ஜோடியாக நடித்த இஞ்சி இடுப்பழகி படமும் விரைவில் வெளி வர இருக்கிறது. ‘பாகுபலி’ இரண்டாம் பாகத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

மேலும் 3 படங்கள் கைவசம் உள்ளன. நகைகள் அணிய திடீர் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக அனுஷ்கா கூறினார். இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-

‘ருத்ரமாதேவி‘ படத்தில் நடிப்பதற்கு முன்பு வரை எனக்கு நகைகள் அணிய பிடிக்காது. கழுத்தில் எதுவும் அணிய மாட்டேன். காதிலும் தோடுகள் அணிவதில்லை. கழுத்தில் நகைகள் அணிந்து செல்லும் பெண்களை வேடிக்கையாக பார்ப்பேன். ஆனால் இப்போது மாறிவிட்டேன். ‘ருத்ரமாதேவி’ படத்தில் நடித்த பிறகு நகைகள் மீது ஆர்வம் வந்துள்ளது.

அந்த படத்தில் ராணி வேடத்தில் வந்தேன். கதாபாத்திரத்துக்காக நிறைய நகைகள் அணிய வேண்டி இருந்தது. பிரத்யேகமாக செய்யப்பட்ட அசல் தங்க நகைகளை அணிந்து நடித்தேன். அந்த கதாபாத்திரம் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இப்போது எனக்கு நகைகள் அணிவதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. பெண்கள் நகைகள் அணிந்து போனால் அவற்றை உற்றுப்பார்க்கிறேன். நகைக்கடைகளிலும் ஏறி இறங்குகிறேன். பெண்களுக்கு நகைகள் அழகுசேர்க்கிறது என்பதை புரிந்து கொண்டு விட்டேன்.

இவ்வாறு அனுஷ்கா கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries