மம்முட்டி, நயன்தாரா நடித்த பாஸ்கர் தி ராஸ்கல் ரீமேக்கில் அஜித்…?

1447139795-1051சித்திக் இயக்கத்தில் மம்முட்டி, நயன்தாரா நடித்த மலையாளப்படம், பாஸ்கர் தி ராஸ்கல். படம் கேரளாவில் ஓரளவு வெற்றியை பெற்றது. படத்தின் இந்தி மற்றும் தமிழ் ரீமேக்கை நானே இயக்குவேன் என்று கூறி வருகிறார் சித்திக்.

சித்திக்கின் முந்தையப்படம், பாடிகாட். திலீப், நயன்தாரா நடித்த இந்தப் படத்தை சித்திக்கே தமிழில் விஜய், அசினை வைத்து ரீமேக் செய்தார். அதே படத்தை அதே – பாடிகாட் என்ற பெயரில் இந்தியில் சல்மான் கானை வைத்து இயக்கினார். இரு மொழிகளிலும் படம் வெற்றி பெற்றது. அதையடுத்து அவர் இயக்கிய படம்தான் பாஸ்கர் தி ராஸ்கல்.

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமை துரைராஜ் என்பவரிடம் இருந்தது. பாஸ்கர் தி ராஸ்கல் ரீமேக்கில் நடிக்க ரஜினி ஆர்வம் காட்டுவதை அறிந்து, படத்தை தயாரிக்க பைனான்ஸ் தயார் செய்தார் துரைராஜ். இந்த நேரத்தில் ரஜினி கபாலியில் நடிக்கச் செல்ல, ரீமேக் திட்டம் கைவிடப்பட்டது.

சமீபத்திய செய்தி, அஜித்தை வைத்து பாஸ்கர் தி ராஸ்கலின் தமிழ் ரீமேக்கை எடுக்க உள்ளனர். சித்திக்கே படத்தை இயக்குவார் என்கிறார்கள்.

வேதாளம் வெளியாகியிருக்கும் நிலையில் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online