புலி தயாரிப்பாளர்கள் சம்பள பாக்கி – தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஸ்ரீதேவி புகார்

1447138774-385புலி படத்தில் தனக்கு பேசிய சம்பளத்தில் இன்னும் 50 லட்சங்கள் தரவில்லை என மும்பை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடிகை ஸ்ரீதேவி புகார் அளித்துள்ளார். அவர்கள் அந்தப் புகாரை தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு அனுப்பியுள்ளனர்.

புலி படத்தில் நடித்த ஹன்சிகா, ஸ்ருதி ஆகியோருக்கு பேசிய சம்பளத்தைவிட பல மடங்கு அதிகமாக ஸ்ரீதேவிக்கு சம்பளம் தரப்பட்டது.

அவர் சொன்ன அனைத்து நிபந்தனைகளுக்கும் புலி படக்குழு சம்மதித்து, வசதிகள் செய்து தந்தனர். இதுவரை இப்படியொரு படக்குழு என்னை கவனித்துக் கொண்டதில்லை என்று ஸ்ரீதேவியும் புளகாங்கிதம் அடைந்தார்.

புலி வெளியாகி சுமாராகவே போனது. பல தரப்பினருக்கும் நஷ்டம். இந்நிலையில்தான், ஐம்பது லட்சம் சம்பள பாக்கி கேட்டு ஸ்ரீதேவி புகார் தந்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள புலி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிபு தமீன்ஸ், ஸ்ரீதேவியுடன் பேசி இந்தப் பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும் என்றார்.

ஸ்ரீதேவிக்கு தந்த சம்பளத்தில் காக்கா முட்டைபோல் ஆறு படங்கள் எடுக்கலாம் என்கிறார்கள் இன்டஸ்ட்ரியில்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries