ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தூங்காவனம் ராஜேஷ்

Kamal-Haasan-Thoongavanam-Movie-Trailerராஜேஷ் ம செல்வா இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள படம் ‘தூங்காவனம்’. இதில் கமல், திரிஷா, கிஷோர், யூகி சேது, மதுஷாலினி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

இப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது ரிலீசாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்திற்காக iflicks.in வாசகர்களுக்கு போட்டி நடத்தியது. இதில் வாசகர்கள் ஆர்வமாக கலந்துக் கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு ‘தூங்காவனம்’ படத்தை பார்ப்பதற்கு பிரத்யேக காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று நடந்த பிரத்யேக காட்சியில், ரசிகர்கள் படத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீர் என்று படத்தின் இயக்குனர் ராஜேஷ் அங்கு வந்தார். படத்தை ஆர்வமாக பார்த்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு இது சர்ப்ரைசாக அமைந்தது.

மேலும் ரசிகர்களிடையே படத்தை பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களை ராஜேஷ் பகிர்ந்துக் கொண்டார். ரசிகர்களுக்கு படம் சிறப்பாக இருக்கிறது என்று கூறி ராஜேஷுக்கு பாராட்டு மழை பொழிந்தனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online