கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் ஜெயம் ரவி

director-gautham-menon-to-join-hands-with-jayam-ravi-photos-pictures-stillsஜெயம் ரவியின் ‘தனிஒருவன்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. நயன்தாரா, அரவிந்த்சாமி நடித்துள்ள இப்படத்தை ஜெயம்ரவியின் அண்ணன் மோகன்ராஜா இயக்கியிருந்தார்.

இதையடுத்து, சுசீந்திரன் இயக்கத்தில் தயாராகும் ‘மிருதன்’ படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். பிரபல இயக்குனர்கள் இவருடைய படங்களை இயக்க தயாராக இருக்கிறார்கள்.

இந்தநிலையில், கவுதம் மேனனின் அடுத்த படத்தில் ஜெயம்ரவி நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

சுசீந்திரன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு கவுதம்மேனன் படத்தில் நடிக்க ஜெயம்ரவி திட்டமிட்டுள்ளார்.

சிம்புவை வைத்து இயக்கும் கவுதம்மேனன் படம் விரைவில் முடிவடைய இருக்கிறது. அதன்பிறகு ஜெயம்ரவி நடிக்கும் புதிய படத்தின் படிப்பிடிப்பை கவுதம்மேனன் தொடங்க இருக்கிறார். இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries