ஹிருத்திக் ரோஷனுடன் நடிக்க ஆசை: தமன்னா

tamanna6இந்த ஆண்டு தீபாவளி குறித்து தமன்னாவிடம் கேட்டபோது, ‘‘நீண்ட வருடங்களுக்குப் பிறகு இந்த ஆண்டு மும்பையில் அப்பா, அம்மா, அண்ணன் மற்றும் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடினேன். எனக்கு பிடித்த நிறத்தில் சுடிதார் வாங்கி அணிந்தேன். வீட்டில் நானே ரங்கோலி கோலம் வரைந்து தீபம் ஏற்றினேன்.

நான் 10 வயது வரை தீபாவளிக்கு பட்டாசு வெடித்தேன். ஒருமுறை தொலைக்காட்சியில், பட்டாசு தயாரிப்பில் குழந்தைகள் பயன்படுத்தப்படுவதை காட்டினார்கள். அதன்பிறகு நானும் என் அண்ணனும் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை விட்டு விட்டோம்.

இந்த ஆண்டு ‘பாகுபலி’ படம் எனக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தது. படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. ‘பாகுபலி–2’ படப்பிடிப்பு டிசம்பர் 2–ல் தொடங்குகிறது. இந்த படத்திலும் நான் நடிக்கிறேன். தமிழ், தெலுங்கில் தற்போது தயாராகி வரும் ‘தோழா’ படத்தில் கார்த்தி, நாகர்ஜூனாவுடன் நடிக்கிறேன்.

தமிழ் ரசிகர்களை நான் மறக்க மாட்டேன். என் மீது அவர்கள் வைத்துள்ள அன்பு அளவுகடந்தது. எனக்கு ஏராளமான வெற்றிகளை தந்து இருக்கிறார்கள். இந்த வருடம் எனக்கு பாகுபலி வருடமாக அமைந்து விட்டது மகிழ்ச்சி.

இந்தியில் ஹிருத்திக் ரோஷனுடன் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கு தயாராக இருக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியுடன் நடிப்பேன். ‘பாகுபலி–2’ வெற்றிப்படமாக அமைய வேண்டும்.

மேலும் பல நல்ல படங்களில் நடித்து விட்டு ரசிகர்களை சந்திக்க வேண்டும். பேய் படங்களில் இதுவரை நடித்தது இல்லை. அதுபோன்ற படங்களில் நடிக்கவும் ஆசை இருக்கிறது.

ரசிகர்களின் ஆதரவு எப்போதும் தேவை’’ என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries