சிவகார்த்திகேயனை இயக்கும் விக்னேஷ் சிவன்

vignesh-sivan-sivakarthikeyanவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘நானும் ரௌடிதான்’. இதில் விஜய் சேதுபதி நாயகனாகவும், நயன்தாரா நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து தன்னுடைய அடுத்த படத்தை இயக்க தயாராகி விட்டார் விக்னேஷ் சிவன்.

விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்னேஷ் சிவன் – சிவகார்த்திகேயன் இணையும் புதிய படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க இருக்கிறார். இவர் தயாரிப்பில் வெளியான ‘வேதாளம்’ ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online