தனுஷுக்கு எதிராக திரும்பிய கேபிள் டிவி ஆபரேட்டர்கள்

Actor Dhanush during the media interaction for the upcoming Celebrity Cricket League 4 in Mumbai on டிசம்பர் 20, 2013. (Photo: IANS)

Actor Dhanush during the media interaction for the upcoming Celebrity Cricket League 4 in Mumbai on டிசம்பர் 20, 2013. (Photo: IANS)

தனுஷ் தற்போது விளம்பர படங்களில் நடிக்க ஆர்வம் காண்பித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த தனியார் டிடிஎச் நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் கேபிள் டிவி ஆபரேட்டர்களை கொச்சைப்படுத்தி சித்தரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தனுஷ் மீது கோபமடைந்துள்ளார்கள்.

உடனடியாக இந்த விளம்பர காட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறிவருகிறார்கள்.

அப்படி இல்லாவிட்டால் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தனுஷுக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries