ஆன்லைனில் சினிமா பாடம் எடுக்கும் பாண்டியராஜன்

02-pandiyarajan-600-jpgஒரு திரைப்படத்தை எடுப்பதற்கு கற்பனை, படைப்பு திறமை இருந்தால் மட்டும் போதாது. கதையைக் காட்சிப் படுத்துவது எப்படி? இயக்குவது எப்படி? என்கிற தொழில் சார்ந்த அடிப்படை அறிவு தேவை.

அதற்கான பிரத்யேக ஆன்லைன் வகுப்புகளை சினிமா ஆர்வம் உள்ளவர்களுக்கு நடத்த முன் வந்துள்ளார் நடிகரும் இயக்குனருமான ஆர்.பாண்டியராஜன்.

வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற உள்ள இந்த சினிமா பயிற்சி பட்டறையின் மூலம் கதை உருவாக்கம் முதல் படம் வெளியிடுவது வரை உள்ள அனைத்து நுணுக்கங்களையும் கற்றுக் கொள்ளலாம்.

உலகின் எந்த மூலையில் இருந்தும் ஆன்லைன் மூலம் இந்த வகுப்புகளைக் கற்றுக் கொள்ளலாம். மேலும், இந்த பயிற்சிப் பட்டறையில் சேர ஆர்வம் மட்டுமே தகுதியாகக் கருதப்படுகிறது. இவை இதன் சிறப்பு அம்சம் ஆகும்.

சினிமாவைப் புத்தகங்களை வைத்து மட்டுமே கற்றுக் கொள்ள முடியாது. திரையுலகில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த அனுபவம் பெற்ற ஒருவர் நடத்தும் பயிற்சிப் பட்டறை பாடங்கள் மூலம் சினிமா பற்றிய செய்முறை நுணுக்கங்களை சிறப்பாக அறிந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு http://www.rpandiarajan.com/ என்ற வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் சென்று மேலும் பல தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online