பெயரை மாற்றிய இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா

srikanth-devaஇசையமைப்பாளர் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த், தமிழ் திரையுலகுக்கு ‘டபுள்ஸ்’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்தார்.

ஆரம்பத்தில் இவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் வெற்றியடைந்தாலும், சரியான படங்களை தேர்வு செய்யாமல் வருகின்ற படங்களை எல்லாம் ஒப்புக்கொண்டதால் இவருடைய பாடல்கள் வரிசையாக தோல்வியை சந்திக்க ஆரம்பித்தன. ஒருகட்டத்தில், இவருக்கு சினிமாவில் வாய்ப்பில்லாமலே போனது.

இந்நிலையில், சமீபத்தில் தனது நண்பர்களுடன் இணைந்து ‘ஸ்மைல் ப்ளீஸ்’ என்ற இசை ஆல்பத்தில் பாடி, நடித்தார். இதைத் தொடர்ந்து தனக்கு வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்தவருக்கு, தற்போது ஜீவா-நயன்தாரா இணைந்து நடித்துள்ள ‘திருநாள்’ படத்தில் மட்டுமே வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதற்காக இந்த படத்தில் தனது பெயரை ஸ்ரீ என்று மாற்றி வைத்துள்ளார். இந்த பெயர் மாற்றம் தனக்கு தமிழ் சினிமாவில் மீண்டும் பெரிய இடத்தை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online