இஞ்சி முறப்பா – திரை விமர்சனம்

Sri Balaji, Sony Charishta in Inji Murappa Movie Images

Sri Balaji, Sony Charishta in Inji Murappa Movie Images

நாயகன் ஸ்ரீபாலாஜி சென்னையில் விளம்பர கம்பெனியில் டிசைனராக பணிபுரிந்து வருகிறார். நாயகி சோனி கால்சென்டரில் பணிபுரிகிறார். ஸ்ரீபாலாஜியின் தங்கையும் சோனியின் அண்ணனும் காதலித்திருக்கிறார்கள்.

இவர்களின் காதல் எல்லை மீறி செல்கிறது. ஒரு கட்டத்தில் ஸ்ரீபாலாஜியின் தங்கையை ஏமாற்றி விட்டு வெளிநாடு சென்று விடுகிறார் சோனியின் அண்ணன்.

இதனால் மனவேதனையடையும் தங்கை தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். இவரை ஸ்ரீபாலாஜி காப்பாற்றுகிறார். அத்துடன் தன் தங்கையின் தோழியுடன் சேர்ந்து சோனியை பகடைக்காயாக வைத்து அவருடைய அண்ணனை வெளிநாட்டில் இருந்து வரவழைக்க முயற்சி செய்கிறார்கள். இதற்காக சோனியை காதலிக்க வைக்கிறார் ஸ்ரீபாலாஜி.

இறுதியில் ஸ்ரீபாலாஜி சோனியின் அண்ணனை வெளிநாட்டில் இருந்து வரவழைத்து பழிவாங்கினாரா? சோனியுடனான காதல் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கு ஸ்ரீபாலாஜி சிறப்பாக நடித்திருக்கிறார். தங்கைக்காக பழி வாங்கும் கதாபாத்திரத்தை சரியாக செய்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் சோனி துறுதுறு பெண்ணாக நடித்து மனதில் பதிகிறார்.

மற்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிருஷ்ணா, ரிஷிகா, நெல்லை சிவா, மனோகர் ஆகியோரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

வழக்கமான பழிவாங்கும் கதையாக இருந்தாலும், வித்தியாசமான திரைக்கதை மூலம் ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் சகா. ஆனால், தேவையற்ற காட்சிகள், லாஜிக் மீறல்கள் படத்திற்கு பலவீனம்.

மணிசர்மா இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை பரவாயில்லை. ராஜுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

மொத்தத்தில் ‘இஞ்சி முறப்பா’ காட்டம் குறைவு.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries