தமன்னாவுக்கு போட்டியாக உடை அணிந்து அசத்திய அமலா பால்

1சமீபத்தில் தமன்னா ஒரு விழாவில் கண்ணாடி போன்ற மெல்லிய உடை அணிந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அதுபோல், தற்போது அமலாபாலும் வித்தியாசமான உடை அணிந்து அனைவருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

இயக்குனர் விஜய்யை மணந்த பிறகு படங்களில் ஆர்வம் காட்டாமல் இருக்கும் அமலாபால், ஏற்கனவே தேர்வு செய்துள்ள கதைகளில் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் சூர்யா தயாரித்திருக்கும் ‘பசங்க 2’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படம் தெலுங்கில் ‘மேமு’ என்ற பெயரில் வெளியாகிறது.

இதன் இசை வெளியீட்டு விழா ஐதாபாத்தில் நடந்தது. இதில் சூர்யா, அமலாபால் மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவரும் அமலாபால் அணிந்திருந்த உடையை பற்றியே பேசினார்களாம்.

அமலாபாலின் உடை மயிலின் கழுத்து நிறத்தில் சேலைபோல் வடிவமைக்கப்பட்டு ஒரு பக்கத்தில் கால் பகுதி முட்டிவரை பளிச்சிடும் வகையில் தைக்கப்பட்டிருந்தது. வலை போன்ற மெல்லிய துணியில் பூ வேலைப்பாடுகளுடன் முழுக்கை ஜாக்கெட் அணிந்திருந்தார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries