பொங்கல் ரேசில் களமிறங்கும் ஜெயம் ரவி

CTdI25bWwAALxqa‘தனி ஒருவன் படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘மிருதன்’. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்து வருகிறார். இமான் இசையமைக்கும் இப்படத்தை சக்தி ராஜன் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்படத்தை பொங்கல் தினத்தன்று வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. பொங்கல் தினத்தில் பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலட்சுமி நடித்துள்ள ‘தாரை தப்பட்டை’, சுந்தர்.சியின் ‘அரண்மனை 2’, சூர்யாவின் ‘24’ ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன. இதைத்தவிர சிம்புவின் ‘இது நம்ம ஆளு’, விஷாலின் ‘கதகளி’ ஆகிய படங்களும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

தீபாவளி தினத்தன்று வெளியான ‘வேதாளம்’ , ‘தூங்காவனம்’ படங்களுக்கு ரசிகர்கள் அதிக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அடுத்ததாக ரசிகர்கள் பொங்கல் தினத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries