நன்றி மறவாத விஜய் சேதுபதி – மீண்டும் சீனு ராமசாமிக்கு கால்ஷீட்

1447409572-4434விஜய் சேதுபதி சீனு ராமசாமிக்கு மீண்டும் கால்ஷீட் தந்துள்ளார். அவர்கள் மீண்டும் இணையும் புதுப்படம் அடுத்த மாதம் தொடங்குகிறது.

சீனு ராமசாமியின், இடம் பொருள் ஏவல் முடிந்து பல மாதங்களாகியும் இன்னும் வெளிவராமல் உள்ளது. படத்தை தயாரித்த திருப்பதி பிரதர்ஸின் கடன்களும் இதற்கு முக்கிய காரணம். படத்தைப் பார்த்த விநியோகஸ்தர்களும், படத்தை வாங்க ஆர்வம் காட்டவில்லை. இடம் பொருள் ஏவலில் விஜய் சேதுபதியும், விஷ்ணுவும் நடித்திருந்தனர்.

இந்நிலையில் மீண்டும் சீனு ராமசாமிக்கு கால்ஷீட் தந்துள்ளார் விஜய் சேதுபதி. சீனுவின் தென்மேற்குப் பருவக்காற்று படம் விஜய் சேதுபதிக்கு அறிமுகப் படமாக அமைந்தது. அவரது இன்றைய உயரத்தின் முதல் படி, தென்மேற்குப் பருவக்காற்று. அந்த நன்றிக்காகவே மீண்டும் சீனு ராமசாமிக்கு கால்ஷீட் தந்துள்ளார்.

இவர்கள் இணையும் படத்துக்கு தர்மதுரை என பெயர் வைத்துள்ளனர். விஜய் சேதுபதிக்கு பொருத்தமான பெயர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online