கோடிக்கணக்கில் செலவு செய்தாலும் நல்ல கதை இல்லாத படம் ஓடாது: வித்யாபாலன்

Vidya-Balan1பாலிவுட் பிரபல நடிகை வித்யாபாலனுக்கு பிரபல தலைவர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களின் பாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்து குவிகிறது.

இது குறித்து அவர் கூறும்போது…

‘‘நான் நடிகை சில்க் சுமிதா வேடத்தில் நடித்தேன். அதில் இருந்து பிரபலங்களின் வாழ்க்கையை பின்னணியாக கொண்ட கதையை வைத்து தயாராகும் படங்களில் முக்கிய பாத்திரத்தில் நடிக்க அழைப்பு வருகிறது.

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி வாழ்க்கையை படமாக எடுத்தார்கள். அதில் இந்திராகாந்தி வேடத்தில் நடிக்க அழைத்தனர்.

இது போல் கர்நாடக சங்கீத பிரபல பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ, நடிகை சுசித்ராசென் ஆகியோருடைய வேடங்களில் நடிக்கவும் அழைப்புகள் வருகின்றன.

இவை தொடர்பான கதைகளை என்னிடம் சொல்லிவிட்டார்கள். ஆனால் இந்த படங்களில் நடிக்க எனக்கு தயக்கமாக இருக்கிறது. வாழ்ந்து மறைந்தவர்களின் வேடங்களில் நடிக்கும் ஆர்வம் எனக்கு குறைந்து விட்டது.

திரைப்படத்துறையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. முன்பெல்லாம் பெரிய பட்ஜெட் படங்கள்தான் ஓடும் என்ற நிலை இருந்தது. இப்போது அப்படியல்ல. சிறிய அளவு முதலீடு செய்து எடுத்த படங்கள் ஓடுகின்றன. காரணம் ரசிகர்கள் கதைக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

நல்ல கதையம்சம் உள்ள படங்களைத்தான் தியேட்டருக்கு சென்று பார்க்கிறார்கள். நல்ல கதையம்சம் உள்ள படங்கள் தான் இனி ஓடும் என்ற நிலை வந்திருக்கிறது.

கோடிக்கணக்கில் செலவு செய்தாலும், கதை இல்லாவிட்டால் அந்த படங்கள் ஓடாது. எனவே நல்ல கதை உள்ள படங்களில் நடிக்கவே விரும்புகிறேன்’’ என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online