மலையாளப் படத்தில் நடிக்கும் கவுதம் மேனன்

gautham-menonமலையாளத்தில் உருவாக இருக்கும் படம் ‘ஜேக்கப்பின் சொர்க்க ராஜ்ஜியம்’. இந்த படத்தை வினீத் ஸ்ரீனிவாசன் இயக்குகிறார். இந்த படத்தில் வேட்டையாடு விளையாடு, காக்க காக்க, விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய கவுதம் மேனன் நடிக்கிறார்.

நிவின்பாலி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நாயகனின் அண்ணன் வேடத்தில் கவுதம் மேனன் நடிக்கிறார்.

தனது படங்களில் பாடல் காட்சிகள் அல்லது ஏதாவது ஒரு காட்சியில் தலை காட்டி வந்த இயக்குனர் கவுதம் மேனன் இப்போது மலையாள படத்தில் நடிப்பது ஏன் என்று கேட்ட போது, ‘‘எனக்கு வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கிய எல்லா படங்களும் பிடிக்கும்.

அவர் என்னை தொடர்பு கொண்டு தன்னுடைய படத்தில் நான் நடிக்க வேண்டும் என்றார். உங்களுக்காகவே என் படத்தில் ஒரு பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் நீங்கள் நடிக்க வேண்டும் என்றார்.

வினீத் ஸ்ரீனிவாசன் என்மீது இவ்வளவு நம்பிக்கை வைத்துக் கேட்டுக் கொண்டதால் என்னால் தவிர்க்க முடியவில்லை. இது மட்டுமல்ல, ஒரு மலையாள படக்கழுவினருடன் சேர்ந்து பணி புரிய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. இதனால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்’’ என்று விளக்கம் அளித்தார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online