வெற்றிமாறன் இயக்கும் படத்தில் தனுஷ் ஜோடியாக மீண்டும் சமந்தா

dhanush-samanthaபொல்லாதவன்– ஆடுகளம் வெற்றிப்படங்களை தொடர்ந்து தனுஷ்– இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைகிறது. ‘வடசென்னை’ என்ற பெயரில் உருவாகும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இதில் தனுஷ் இதுவரை நடித்திராத மாறுபட்ட வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

தனுஷ் கதாபாத்திரத்தின் 30 ஆண்டு வளர்ச்சியை காட்டும் வகையில் காட்சிகளை அமைக்க வெற்றிமாறன் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தனுஷ் ஜோடியாக நடிக்கும் சமந்தா குடிசை வாழ் பெண்ணாக நடிக்கிறார். இதற்காக மேக்கப் போடாமல் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சமந்தா சென்னையில் பிறந்து வளர்ந்தவர் எனவே இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சமந்தாவை தேர்வு செய்துள்ளனர். இது மட்டுமல்ல சென்னை தமிழை அவர் சொந்த குரலில் பேச இருக்கிறார்.

முன்னதாக துரைசெந்தில் குமார் இயக்கும் படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார். இதில் திரிஷா, ஷாமிலி நடிக்கிறார்கள். அதன்பிறகு வெற்றிமாறன் இயக்கும் ‘வடசென்னை’ படமாக இருக்கிறது.

அடுத்த ஆண்டு இதற்கான படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்த படத்துக்கு தனுஷ் அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries