லட்சுமிமேனனுக்கு அஜீத் வழங்கிய போனஸ்

thala‘வேதாளம்’ படத்தில் அஜீத் தங்கையாக நடித்திருப்பவர் லட்சுமிமேனன். இவரது நடிப்புக்கு பலதரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் வந்து குவிகின்றன. படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு அஜித்துக்கும் அவரது ரசிகர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

அஜீத்– லட்சுமிமேனன் அண்ணன்– தங்கை பாசம் படத்தில் வெகுவாக பேசப்படுகிறது. இந்த படத்தில் அஜீத்தின் தங்கையாக நடிப்பதற்கு லட்சுமிமேனனிடம் கேட்ட போது உடனே ஒப்புக்கொண்டாராம். இந்த படப்பிடிப்பின் போது உண்மையாகவே, அஜீத் அண்ணனாகவே நடந்து கொள்ள, லட்சுமிமேனன் தங்கை பாசத்தை காட்டினாராம். இந்த தகவல் ஏற்கனவே வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் லட்சுமி மேனன் நடிப்பு மட்டுமல்ல, ‘வேதாளம்’ படமும் சிறப்பாக ஓடுவதால், லட்சுமிமேனனுக்கு பேசியதை விட கூடுதல் சம்பளம் கொடுக்க அஜித் விரும்பினார்.

இதையடுத்து தயாரிப்பாளரிடம் லட்சுமி மேனன் சம்பள விவகாரத்தை கேட்டறிந்த அஜீத், தனது அன்பளிப்பாக லட்சுமி மேனனுக்கு கூடுதலாக கொஞ்சம் தொகையை சேர்த்துக் கொடுக்கும் படி கேட்டுக்கொண்டாராம்.

அஜீத் மூலம் அதிர்ஷ்டம் தேடி வந்ததால் லட்சுமிமேனன் மகிழ்ச்சியில் இருக்கிறார் என்று கோடம்பாக்கம் வட்டாரம் தெரிவிக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online