பிசியான நேரத்திலும் ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய ரஜினி

Rajiniரஜினி தற்போது ‘கபாலி’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்து தற்போது இரண்டாம் கட்டமாக மலேசியாவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதற்காக சமீபத்தில் மலேசியா சென்ற ரஜினிக்கு அங்கு பலத்த வரவேற்பு கொடுக்கப்பட்டது. மலேசியாவில் தற்போது பிசியாக படப்பிடிப்பில் நடித்து வரும் ரஜினி, இருதய நோயால் பாதிக்கப்பட்ட தனது ரசிகர் ஒருவரின் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.

நீண்டநாளாக தன்னை பார்க்க நினைத்த அந்த ரசிகரை நேரில் வரவழைத்து அவருடன் சிறிது நேரம் செலவிட்டுள்ளார். அந்த ரசிகர் ரஜினிக்கு நினைவு பரிசு ஒன்றையும் அளித்தார்.

அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார் ரஜினி. மிகப்பெரிய நடிகர், பிசியான நேரத்திலும் ஒரு ரசிகரின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து, அவரை சந்தித்தது அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

ரஜினி அந்த ரசிகருடன் சிரித்து பேசுவது போன்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ‘கபாலி’ படத்தை பா.ரஞ்சித் இயக்கி வருகிறார். ராதிகா ஆப்தே, தன்ஷிகா, ரித்விகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries