லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ்

d2c837db-e2a0-41c4-8061-b755489aff60OtherImageஇசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக வளர்ந்து வருகிறார்.

இவர் அறிமுகமான ‘பென்சில்’ படம் இன்னும் வெளிவரவில்லை என்றாலும், அடுத்தடுத்து இவர் நடித்த படங்கள் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ‘டார்லிங்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ஆகிய படங்கள் இவர் திறமையான நடிகர் என்பதை வெளிக்காட்டியது.

தற்போது ‘புருஸ்லீ’ என்ற படத்தில் இவர் நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை தயாரித்த லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் குறித்த மேலும் பல தகவல்கள் விரைவில் வெளியாகவுள்ளன.

லைக்கா புரொடக்ஷன்ஸ் தற்போது சினிமாவில் தயாரிப்பு மட்டுமின்றி, படங்களை வாங்கி வெளியிடும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் தனுஷ் தயாரித்து விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த ‘நானும் ரௌடிதான்’ படத்தை வாங்கி வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து தனுஷ் நடித்துள்ள ‘தங்கமகன்’ படத்தை வெளியிடும் உரிமையையும் பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல், ரஜினி-ஷங்கர் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் ‘எந்திரன்-2’ படத்தையும் தயாரிக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries