சந்தானத்தின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது

Santhanamதமிழ் சினிமாவில் நம்பர் ஒன் காமெடியனாக வலம்வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். தனது நெருங்கிய நண்பர் ஸ்ரீநாத் இயக்கிய ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமான சந்தானம், அதைத் தொடர்ந்து, அவருடைய மற்றொரு நண்பர்களான முருகன், ஆனந்த் இணைந்து இயக்கிய ‘இனிமே இப்படித்தான்’ படத்திலும் ஹீரோவாக நடித்தார்.

இவ்விரு படங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறவே, காமெடி வேடத்துக்கு குட்பை சொல்லிவிட்டு, தற்போது ஹீரோவாக மட்டுமே நடிக்கும் முடிவுக்கு மாறியுள்ளார்.

இந்நிலையில், இவரை முதன்முதலாக அறிமுகப்படுத்திய ‘லொள்ளுசபா’ இயக்குனர் ராம்பாலா இயக்கும் புதிய படத்தில் சந்தானம் ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இந்த படப்பிடிப்பில் இயக்குனர் ராம்பாலா, சந்தானம், நடிகர் ஆனந்த் ராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

திகில் கலந்த காமெடி படமாக இப்படம் உருவாகவிருக்கிறது. தமன் இசையமைக்கும் இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்க புதுமுக நடிகை ஒருவரை தேடி வருகிறார்கள். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries