கபிலன் வைரமுத்துவுடன் புது கூட்டணி வைக்கும் கே.வி.ஆனந்த்

FOR FRIDAY PAGE: K. V. Anand, Director/ Cinematographer at Hotel Park Sheraton in Chennai. Photo: Vino John. (மே 14th 2005)

பிரபல ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த், ‘கனா கண்டேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து, ‘அயன்’, ‘கோ’, ‘மாற்றான்’, ‘அனேகன்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இவர் இயக்கிய அனைத்து படங்களுக்கும் கதாசிரியர்கள் சுபா-தான் கதை மற்றும் வசனங்களை எழுதி வந்தனர். இந்நிலையில், தற்போது இயக்கவிருக்கும் புதிய படத்திற்கு கபிலன் வைரமுத்துவுடன் இணைந்து புதிதாக கூட்டணி அமைத்து கதை-வசனங்களை எழுதவுள்ளார் கே.வி.ஆனந்த்.

கபிலன் வைரமுத்து இதுவரை பல படங்களுக்கு பாடல்களும், வசனங்களும் எழுதியுள்ளார். முதன்முறையாக இந்த படத்தின் மூலம் கே.வி.ஆனந்துடன் இணையவுள்ளார்.

இப்படத்தில் ஆர்யா, விஷால், சிவகார்த்திகேயன் ஆகிய மூவரில் ஒருவர் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால், அவையெல்லாம் வதந்தி என்றும், தற்போது ஜீவா இந்த படத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘கோ’ படத்தை தயாரித்த ஆர்.எஸ்.இன்போடெயின்ட்மெண்ட் நிறுவனம்தான் இப்படத்தையும் தயாரிக்கவிருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries