பொங்கல் ரேசில் களமிறங்கும் விஷாலின் கதகளி

kathakali-stills-photos-pictures-05தீபாவளிக்கு அடுத்து தமிழ் திரையுலகுக்கு கொண்டாட்டமான நாள் பொங்கல்தான். பொங்கல் அன்று பெரிய நடிகர்களின் படங்கள் களத்தில் இறங்கும். அந்த வரிசையில் இந்த பொங்கல் ரேசில் முதன்முதலாக களத்தில் குதித்துள்ளார் விஷால்.

இவர் நடிப்பில் உருவாகிவரும் ‘கதகளி’ படம் பொங்கல் அன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர். ‘கதகளி’ படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.

இந்நிலையில், நேற்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில்தான், படம் பொங்கலுக்கு படம் வெளியாகும் என தெரிவித்துள்ளனர். இதேபோல், ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ‘மிருதன்’ படமும் பொங்கல் ரேசில் களமிறக்க முடிவு செய்துள்ளனர்.

மேலும், பாலாவின் ‘தாரை தப்பட்டை’, சூர்யாவின் ‘24’, சுந்தர்.சியின் ‘அரண்மனை-2’ ஆகிய படங்களை பொங்கலை குறிவைத்து தயாராகி வருகின்றன. விரைவில், எந்தெந்த படங்கள் பொங்கல் ரேசில் களமிறங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online