ஆக்‌ஷன் அவதாரம் எடுக்கும் ஜி.வி.பிரகாஷ்

378931-gvprakash-fbஇசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான ‘டார்லிங்’ படம் சூப்பர் ஹிட்டானது. அதனை தொடர்ந்து வெளியான ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படமும் வெற்றி பெற்றது. இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.

தற்போது இவர் ‘புரூஸ் லீ’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தையடுத்து விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை தயாரித்த லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த புதிய படத்தை ‘டார்லிங்’ படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கவுள்ளார்.

‘டார்லிங்’ படம் போல் திகில் படமாக உருவாக்க இருக்கிறார்கள். மேலும் ஆக்‌ஷன் கலந்த பொழுதுபோக்கு படமாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக ஜி.வி.பிரகாஷ் இப்படத்தில் ஆக்‌ஷன் அவதாரம் எடுக்க இருக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

ஜி.வி.பிரகாஷ் இப்படத்தை தவிர ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online