இஞ்சி இடுப்பழகி படத்தில் கௌரவ வேடங்களில் 8 முன்னணி நடிகர், நடிகைகள்

Inji-Idupazhagi-aka-Size-Zero-Teaser-Releasedபெரிதும் எதிர்பார்க்கபடும் படங்களில் ஒன்றான ‘இஞ்சி இடுப்பழகி’ ரசிகர்களின் ஆர்வத்தை நாளுக்கு நாள் கூட்டிக் கொண்டு இருக்கிறது. இந்தப் படத்துக்காக அனுஷ்கா சுமார் 20 கிலோவுக்கு மேலாக எடைக் கூடினார் என்பது முக்கியமான விஷயம்.

மேலும், இப்படத்தில் ஆர்யா, அனுஷ்கா, ஊர்வசி, பிரகாஷ் ராஜ் என பெரிய நட்சத்திர பட்டாளம் இருந்தாலும் இப்போது கௌரவ வேடத்தில் நாகார்ஜுன், ஜீவா, பாபி சிம்ஹா, ராணா ஆகியோருடன் ஹன்சிகா, தமன்னா, ஸ்ரீதிவ்யா, ரேவதி ஆகியோரும் நடித்து உள்ளனர்.

ஜீவாவும், ஹன்சிகாவும் ஆர்யாவின் நெருங்கிய நண்பர்கள் என்பதாலும், பாபி சிம்ஹாவும், ஸ்ரீ திவ்யாவும் ஆர்யாவுடன் ‘பெங்களூரு டேஸ்’ ரீமேக் படத்தில் இணைந்து நடித்து இருப்பவர்கள் என்பதாலும் மறுப்பேதும் இல்லாமல் இதில் நடிக்க உடனே ஒப்புக் கொண்டுள்ளனர்.

மேலும், ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் மையக்கரு அழகு என்பது உடல் அமைப்பிலோ, தோற்ற பொலிவிலோ இருப்பது அல்ல. நம்முள் இருக்கும் நல்ல எண்ணம் தான் உண்மையான அழகு என்பதுதான். இந்தக் கருத்தை ஆமோதிக்கும் காஜல் அகர்வாலும், தமன்னாவும் நடிக்க கேட்டவுடன் உடனே நடிக்க ஒப்புக் கொண்டுள்ளனர்.

அழகாக இருப்பதற்கு, இயற்கையான முறைகளே போதும், செயற்கை சாதனங்கள் வேண்டாம் என்றக் காரணத்தை வலியுறுத்தும் ரேவதியும் இந்தப் படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை பழம்பெரும் இயக்குனர் ராகவேந்திரா ராவின் மகன் கே.எஸ்.பிரகாஷ் ராவ் இயக்கி வருகிறார். மரகத மணியின் இசையில், மதன் கார்க்கியின் வரிகளில் வெளிவந்த ‘இஞ்சி இடுப்பழகி’ பாடல்களும், டிரைலரும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து உள்ளது.

இந்த மாதம் 27-ம் தேதி தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் இப்படம் வெளிவருகிறது. பிவிபி சினிமா இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries