நடிகர் அஜித்திற்கு விஜய் ரசிகர்கள் வைத்த டிஜிட்டல் பேனர்

1447721578-3529தமிழ் திரையுலகத்தினர் நம்பமுடியாத ஒரு சம்பவம், ஈரோடு அருகே நடிகர் அஜித்திற்கு, நடிகர் விஜய் ரசிகர்கள் டிஜிட்டல் பேனர் வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளது தான்.

தமிழ் திரையுலகத்தில் நிலவி வரும் ஒரு பேச்சு என்னவென்றால், இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் பிரச்சனையை விட தீராத பிரச்சனையாக இருப்பது நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித் குமார் ரசிகர்களின் தீராத சண்டை தான்.

நடிகர் அஜித்-நடிகர் விஜய் இருவரும் நல்ல நண்பர்கள் என தமிழ் திரையுலம் அனைவருக்கும் நன்கு தெரியும். ஆனால், அவர்களது ரசிகர்கள் இன்று வரை அடிக்கடி மோதிக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பலமுறை பதட்டம் தொற்றிக் கொண்டது உண்டு.

இந்த நிலையில் அஜித் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான வேதாளம் திரைப் படத்திற்கு நடிகர் அஜித்தை வாழ்த்தி ஈரோடு அருகே உள்ள கூட்டப்பள்ளியில் நடிகர் விஜய் ரசிகர்கள் சிலர் டிஜிட்டல் பேனர் வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதில் எத்தனை தோல்விகள் கண்டாலும் அஜித்,விஜய் இருவரும் மீண்டு வருவார்கள் என பஞ்ச் டயலாக் வைத்து தூள்கிளப்பிள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online