ஜேம்ஸ்பாண்டை கம்மியாக முத்தம் கொடுக்க சொன்ன இந்திய சென்சார் போர்டு

Daniel-Craig-and-Monica-Bellucci-in-Spectre-583460சர்வதேச பாக்ஸ் ஆபீசில் பல்வேறு வசூல் சாதனைகளை நிகழ்த்தி வரும் ஜேம்ஸ்பாண்ட் திரைப்படமான ஸ்பெக்டர் இந்தியாவில் வரும் வெள்ளிக்கிழமை ரிலீசாகிறது.

மேலும், பாண்ட் கொடுக்கும் உதட்டு முத்த காட்சிகளின் அளவை 50 சதவீதம் வரை குறைத்து வெட்டி வீசியுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இப்படத்துக்கு இந்திய சென்சார் போர்டு (CBFC), யூ/ஏ சர்டிபிகேட் கொடுத்துள்ளது. ஆனால் சில நிபந்தனைகளோடுதான் இந்த சர்டிபிகேட் தரப்பட்டிருக்கிறது. படத்தில் இடம்பெற்ற 4 காட்சிகள் வெட்டப்பட்டுள்ளன. இதில் 2 வசனங்கள், 2 முத்தக்காட்சிகள்…

அந்த கட் செய்யப்பட்ட காட்சிகளில், ஜேம்ஸ்பாண்ட் கதாப்பாத்திரத்தில் நடிக்கும், டேனியல் கிரேக், நடிகைகளுக்கு நீண்ட நேரம் உதட்டோடு உதட்டை இணைத்து முத்தம் கொடுத்திருக்கின்றார். முத்தக் காட்சியை மொத்தமாக நீக்கக் கோராத சென்சார் போர்டு, தேவையில்லாமல் நீண்ட நேரமாக, அவர் வாய் ஜாலம் காட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளது.

ஆனால், முத்தத்தை இவ்வளவு நேரம்தான் கொடுக்க வேண்டும் என்று சென்சார் போர்டு முடிவு செய்வது எங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறதென்று சுயாதீன திரைப்படக் கலைஞர்கள் சென்சார் போர்டை குற்றம் சாட்டியுள்ளனர்.

முத்தக்காட்சிகளின் நீளத்தில் சுமார் 50 சதவீதம் கட் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆங்கிலத்தில் ‘எப்’ மற்றும் ‘ஏ’ என்ற எழுத்தில் தொடங்கும் வசனங்களும் கட் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, பிரதமர் மோடியைப் புகழ்ந்து வீடியோ வெளியிட்டவரும் தீவிர பா.ஜ.க. ஆதர்வாளருமான பஹ்லஜ் நிஹ்லானியின் தலைமையில் சென்சார் போர்டு செயல்படுவதால், சென்சார் போர்டு இந்துமயமாகிவிட்டதாக கருத்துரிமை ஆர்வலர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து கூறிவருகின்றனர்.

இந்த கருத்துக்களுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல், எழுத்தாளரும் இயக்குநருமான ஷ்ரிஷ் குந்தர் கூறுகையில், “ஜேம்ஸ்பாண்ட் உலகை காப்பாற்றுவார். ஆனால் ஜேம்ஸ்பாண்டை இந்திய சென்சார் போர்டிடம் இருந்து காப்பாற்றமுடியவில்லை” என்று கூறியுள்ளார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries