பரத் நடிக்கும் பொட்டு – இதுவும் பேய் படமாம்

1447841651-4048பேய்களுக்கே பயம் ஏற்படும் அளவுக்கு பேய் படங்களாக எடுத்து குமிக்கிறார்கள் தமிழ் சினிமாவில். இயக்குனர் வடிவுடையான் சவுகார்பேட்டை என்ற பேய் படத்தை தற்போது எடுத்து வருகிறார். அந்தப் படம் வெளிவருவதற்குள் அடுத்தப் படத்தை அறிவித்துள்ளார். அதன் பெயர்தான் பொட்டு. அதுவும் பேய் படம்.

சாதாப் படத்தையே பேய் படம் அளவுக்கு டெரராக எடுப்பவர் வடிவுடையான். அவர் பேய் படம் எடுத்தால் சொல்லவா வேண்டும். சவுகார்பேட்டை படத்தின் கிளைமாக்ஸில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பேய்கள் இடம் பெறுகிறதாம். அப்படியானால் பொட்டு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

மருத்துவக் கல்லூரி பின்னணியில் பொட்டு தயாராகிறது. பரத் நாயகன். நாயகி இன்னும் முடிவாகவில்லை. சரவணன், கருணாஸ், ஊர்வசி, சுமன், சிங்கம் புலி உள்பட பலர் நடிக்கின்றனர். நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்பரீஷ் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் (நடிப்பு என்னாச்சி?).

ஷாலோம் ஸ்டுடியோஸ் படத்தை தயாரிக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online