சூர்யா நடிக்க மறுத்த படத்தில் ஜெயம் ரவி – கௌதம் திட்டம்

1447921355-7354சூர்யாவை வைத்து கௌதம் இயக்கவிருந்த படம் துருவ நட்சத்திரம். ரஹ்மான் இசையமைப்பதாக இருந்த இப்படம், பூஜை போட்டபின் திடீரென சூர்யா படத்திலிருந்து விலகிக் கொண்டதால் நின்றது.

கௌதம் திரைக்கதையை முழுமையாக முடிக்கவில்லை, இனிமேல் இருவரும் சேர்ந்து பணிபுரிவதற்கான வாய்ப்பேயில்லை என்று படத்திலிருந்து விலகியதற்கு காரணம் சொன்னார் சூர்யா.

தனி ஒருவன் படம் பார்த்த கௌதம், சூர்யாவின் இடத்தை நிரப்ப சரியான ஆள் ஜெயம் ரவி என்ற முடிவுக்கு வந்துள்ளார். ஜெயம் ரவியை வைத்து துருவ நட்சத்திரம் படத்தை எடுக்க அவர் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. ரஹ்மானுக்குப் பதில் தனது பழைய நண்பர் ஹாரிஸை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யவும் கௌதம் முடிவு செய்துள்ளார்.

மிருதன் படத்தை முடித்த ஜெயம் ரவி அடுத்து பிரபுதேவா தயாரிப்பில் லக்ஷ்மண் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து கௌதம் படத்தில் அவர் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries