கயல் படத்தின் நாயகனுடன் தொகுப்பாளினி அஞ்சனாவுக்கு விரைவில் காதல் திருமணம்

1447936811-6144கயல் படத்தில் நாயகனாக அறிமுகமான சந்திரன் சன் மியூசிக் தொலைக்காட்சி தொகுப்பாளினியான அஞ்சனாவை கரம் பிடிக்கிறார். இவர்களது நிச்சயதார்த்தம் வரும் 29 ஆம் தேதி நடக்க இருக்கிறது.

பிரபு சாலமன் இயக்கத்தில் கயல் படத்தின் மூலம் அறிமுகமான நாயகன் சந்திரன். இந்த படத்திற்கு பிறகு எந்த பட வாய்ப்புகளும் வரத நிலையில்.

தற்போது பிரபுசாலமன் தயாரிக்கும் பைசல் என்ற படத்தில் நடித்து வருகிறார். பிவிபி சினிமாஸ் தயாரிக்கும் ‘கிரகணம்’ என்ற படத்திலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில், ஒரு விருது வழங்கும் விழாவில் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த அஞ்சனாவை முதல் முதலாக சந்திரன் பார்த்துள்ளார்.

சந்திரனுக்கு பார்த்ததும் பிடித்துப்போனதால்முதலில் அஞ்சனாவுடன் நண்பராக அறிமுகமாகியிருக்கிறார். நாளடைவில் நட்பு காதலாக மாறியது. பின்னர், இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த காதலை நாயகன் சந்திரனே உறுதிப்படுத்தியுள்ளாதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இரு வீட்டரின் சம்மதத்துடன் திருமணம் நிச்சயதார்த்தம் வருகிற நவம்பர் 29ந் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஒட்டலில் நடக்க இருக்கிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries