ஆரண்யம் – திரை விமர்சனம்

app_thumb_512நாயகன் ராம், எந்த வேலைக்கும் போகாமல் திருடுவதையே தொழிலாக வைத்து வருகிறார். நாயகி நீரஜாவின் அப்பா, இவர் வசிக்கும் பகுதியில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு காதலர்களை கண்டாலே பிடிக்காது. தனது ஸ்டேஷனுக்கு தஞ்சமாக வரும் காதலர்கள் பிரித்து வைப்பதையே வேலையாக கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், ராம் ஒரு நூதன திருட்டில் ஈடுபடுகிறார். இதை பார்க்கும் நீரஜா அவரை போட்டோ எடுத்து தன் தந்தைக்கு அனுப்புகிறார். இதனால் ராம் போலீசிடம் சிக்கிக் கொள்கிறார். நாயகனின் தந்தை இளவரசு வக்கீலுடன் சென்று ராமை மீட்டு வருகிறார்.

இதையடுத்து, ராம் தன்னை மாட்டி விட்ட நீரஜாவை பழிவாங்க துடிக்கிறார். ஒரு நாள் நீரஜாவின் செல்போனை திருடி செல்கிறார் ராம். இவரை கையும் களவுமாக போலீசிடம் பிடித்துக் கொடுக்க நினைக்கிறார் நீரஜா.

ஒருகட்டத்தில், ராமின் இரக்க குணத்தை அறிந்து கொண்ட நாயகி, தன் எண்ணத்தை மாற்றிக் கொள்கிறார். மேலும் ராம் மீது காதல் வயப்படுகிறார். ஆனால், ராமிடம் தன் காதலை சொல்லாமலே அவரை தன் பின்னாலேயே சுற்ற வைக்கிறார்.

ஒரு கட்டத்தில் ராமுவும் நீரஜாவை காதலிக்க, இந்த விஷயம் நீரஜாவின் அப்பாவிற்கு தெரியவருகிறது. காதலர்களை பிரிப்பதையே கொள்கையாக வைத்திருக்கும் நீரஜாவின் அப்பா, ராமை கொல்ல கூலிப்படையை ஏவுகிறார். இதையறிந்த ராம், நீரஜா இருவரும் காட்டுக்குள் தப்பி ஓடுகிறார்கள்.

இறுதியில் இவர்கள் கூலிப்படைக்கு பலியானார்களா? காதலில் வென்றார்களா? என்பதை மாறுப்பட்ட கோணத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ராம், திருடனாக நடித்திருந்தாலும் அதிலும் வெகுளித்தனத்தை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றிருக்கிறார்.

நாயகியுடன் மாட்டிக்கொண்டு முழிக்கும் போது, ரசிக்கும் படி உள்ளது. நீரஜா படம் முழுக்க துணிச்சலான பெண்ணாக வலம் வருகிறார். திரையில் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். நீரஜாவின் அப்பா, இளவரசு உள்ளிட்ட பல கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

கமர்ஷியல் படத்தை வித்தியாசமான திரைக்கதை மூலம் இயக்கியிருக்கிறார் குபேர்ஜி. முதல் பாதியில் திரைக்கதையில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், பிற்பாதியில் எதிர்பாராத திரைக்கதை ரசிக்க வைக்கிறது. காதலை வித்தியாசமான கோணத்தில் சொல்லியதற்கு பாராட்டுக்கள்.

எஸ்.ஆர்.ராம் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். சாலை சகாதேவனின் ஒளிப்பதிவு காடுகளை அழகாக படம் பிடித்து காட்டியிருக்கிறது.

மொத்தத்தில் ‘ஆரண்யம்’ ஆச்சர்யம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries