மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார் கேப்டன் விஜயகாந்த்

1448027760-3722தேமுதிக கட்சி தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் மற்றும் அவரது மகன் சண்முகபாண்டியனும் இணைந்து “தமிழன் என்று சொல்” என்ற புதிய படத்தில் நடிக்கிறார்.

விஜயகாந்த் இயக்கி நடித்து கடைசியாக வெளிவந்த படம் விருதகிரி. இந்த படம் வெளிவந்த பின்னர் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றதில் அவர் எதிர்க்கட்சி தலைவர் ஆனார். பின்னர் அவர் அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வந்தார்.

இதனால் கடந்த 5 ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அவர் தற்போது புதுமுக இயக்குனர் அருண் பொன்னம்பலம் இயக்கும் புதிய படத்தில் அவர் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தில் கேப்டன் விஜயகாந்தும் அவரது மகன் சண்முகபாண்டியனும் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு “தமிழன் என்று சொல்” என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தை தமிழ் ஸ்டுடியோஸ் எண்டெர்டெயின்மென்ட் மீடியா நெட்வொர்க்ஸ் சார்பாக கோவர்தனி வரதராஜன் என்பவர் தயாரிக்கிறார்.

மேலும், தனி ஒருவன் படத்திற்கு இசையமைத்த ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்படத்துக்கு இசையமைக்கிறார். வருகின்ற 22 ஆம் தேதி சென்னையில் உள்ள ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் இப்படத்திற்கு பூஜை பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries