பிளேடு ஜீவாவை திருத்தும் போல்டு நயன்தாரா

1448023222-5214நயன்தாரா நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம், திருநாள். நியாயமாக இது நம்ம ஆளுதான் வர வேண்டும். சிம்பு நடித்தப் படத்தின் ரிலீஸ் தேதியைப் பற்றி கேட்டால் கடவுளே கன்ஃபூஸனாகிவிடுவார்.

திருநாள் படத்தின் கதை முழுவதும் கும்பகோணத்தில் நடக்கிறது. பிளேடு போடும் ரவுடியாக படத்தில் வருகிறார் ஜீவா. அவரை திருத்தும் கதாபாத்திரம் நயன்தாராவுக்கு. படம் முழுக்க கிராமத்து கெட்டப்பில் வளைய வருகிறாராம்.

சமீபத்தில் திருநாள் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அதில் உதட்டில் முத்தம் கொடுக்க வரும் ஜீவாவை, அவரைப் போலவே வாய்க்குள் பிளேடு வைத்து பிளாக் பண்ணுவார் நயன்தாரா. இதே போல் படம் முழுக்க ஆக்கிரமித்திருக்கிறாராம் நயன்தாரா.

திருநாள் வெளிவந்தால் ரசிகர்களுக்கு திருவிழா கொண்டாட்டம் தான் என்கிறது படயூனிட்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries