கருவாடு கதைக்காகுமா…?

1448018714-3971ராதாமோகனின் கடைசி இரு படங்கள் – பயணம், கௌரவம் – சரியாகப் போகாத நிலையில் உப்பு கருவாடு என்ற படத்தை தொடங்கி முடித்தும் விட்டார். நந்திதா, கருணாகரன் நடித்துள்ள கருவாடு தயாராகி பல மாதங்களாகியும் இன்னும் வெளிவராமல் உள்ளது.

இந்த மாதம் படம் வெளிவரும்போல் தெரியவில்லை. டிசம்பரில் வெளியாகும் எண்ணமும் உப்பு கருவாடுக்கு இருப்பதாக தோன்றவில்லை. ஐரணி என்னவென்றால், இந்தப் படத்தைதான் அதிகம் நம்பிக் கொண்டிருக்கிறார் நந்திதா.

அட்டகத்தியில் அறிமுகமான நந்திதாவின் ராசி தற்போது மழையில் மாட்டிய சென்னை மாதிரி தத்தளிக்கிறது. அவர் அதிகம் நம்பியது இரு படங்களை. ஒன்று, சீனு ராமசாமியின் இடம் பொருள் ஏவல். திருப்பதி பிரதர்ஸின் நிதி நெருக்கடியால் படம் இன்னும் வெளியாகவில்லை. ஏறக்குறைய அதே நிலை தான் கருவாடு படத்துக்கும்.

இந்த இரு படங்களும் வெளிவந்தால், கருவாடாகிப் போன தனது மார்க்கெட் மீண்டும் மீனாக துள்ளிக் குதிக்கும் என்று நம்புகிறார் நந்திதா.

நம்பிக்கைத்தானே வாழ்க்கை.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online