அழகிய தமிழ்மகன் இயக்குனருடன் இணையும் விஜய்

azhagiya230207_3விஜய் தற்போது தனது 59-வது படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தை ‘ராஜாராணி’ இயக்குனர் அட்லி இயக்கி வருகிறார். இப்படத்தை தொடர்ந்து விஜய், தனது 60-வது படமாக மோகன்ராஜா, எஸ்.ஜே.சூர்யா அல்லது கார்த்திக் சுப்பாராஜ் இவர்களில் யாராவது ஒருவர் இயக்கும் படங்களில் நடிப்பார் என்று கூறப்பட்டது.

ஆனால், தற்போது விஜய்யை வைத்து ‘அழகிய தமிழ்மகன்’ படத்தை இயக்கிய பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கப்போவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

பரதன் விஜய் நடித்த ‘கில்லி’, அஜித்தின் ‘வீரம்’ ஆகிய படங்களுக்கு வசனங்கள் எழுதியுள்ளார். தற்போது, இவர் சொன்ன கதை விஜய்க்கு பிடித்துப்போனதும் இதில் நடிக்க உடனே விஜய் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. எடிட்டர் பிரவின் கே.எல் இப்படத்தை எடிட்டிங் செய்யவிருக்கிறார். இவர் ரஜினியின் ‘கபாலி’ படத்திற்கும் எடிட்டிங் செய்கிறார்.

மதி ஒளிப்பதிவை கவனிக்கிறார். அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இப்படத்தை தொடங்கவிருக்கின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries