பசங்க-2 ரீலீஸ் தேதி அறிவிப்பு

Pasanga-2சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் புதிய படம் ‘பசங்க-2’. பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு முதலில் ‘ஹைக்கூ’ என்று பெயர் வைத்திருந்தனர். பின்னர், ‘பசங்க-2’ என்று தலைப்பை மாற்றியுள்ளனர்.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். மேலும், பிந்துமாதவியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

முழுக்க முழுக்க குழந்தைகளை மையப்படுத்தியே உருவாகியுள்ள இப்படத்தை சூர்யாவும், பாண்டிராஜூம் இணைந்து தயாரித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனமும் இணைந்து வெளியிடுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் எல்லாம் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், இப்படத்தை வருகிற டிசம்பர் 4-ந் தேதி வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பாண்டிராஜ் இயக்கத்தில் ஏற்கெனவே வெளிவந்த ‘பசங்க’ படம் எல்லாதரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. அந்த வரிசையில் இந்த படமும் அனைவரையும் கவரும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online