மதுரை பாசை பேச கஷ்டப்பட்ட சிவா

actor-siva‘சரோஜா’, ‘தமிழ்ப்படம்’, ‘வ’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சிவா. இவர் தற்போது ‘144’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். சிவாவுடன் இப்படத்தில் அசோக் செல்வன், ஓவியா, ஸ்ருதி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மணிகண்டன் இயக்கியுள்ளார்.

மதுரையை கதைக் களமாக கொண்டு இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். 45 வருடங்களுக்கு முன்பு மதுரையில் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

இதில் சிவா திருடனாக நடித்திருக்கிறார். இப்படத்தில் நடிக்கும்போது மதுரை பாசையை பேச சிவா மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். இவருக்கு ஜோடியாக ஓவியா நடித்திருக்கிறார். இவர் ஏற்கனவே சிவாவுடன் ‘கலகலப்பு’ படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார்.

‘முண்டாசுப்பட்டி’ சாயலில் இப்படத்தை இயக்கியிருக்கிறார் மணிகண்டன். சி.வி.குமார் தயாரித்திருக்கும் இப்படத்தை குருதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஷாம் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online