நடிகர் தன்ஷிகா மருத்துவமனையில் அனுமதி : கபாலி படப்பிடிப்பில் கீழே விழுந்தார்

Dhanshikaநடிகை தன்ஷிகா கபாலி படப்பிடிப்பில் கீழே விழுந்ததால் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தன்ஷிகா பேராண்மை படத்தில் அறிமுகமானார். அதன் பின், அரவான், பரதேசி உட்பட சில படங்களில் நடித்தார்.

ரஜினியின் கபாலி படப்பிடிப்பு இப்போது மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான காட்சிகளுக்கான படப்பிடிப்பு அங்கே நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகை தன்ஷிகா ரஜினியின் மகளாக நடித்து வருகிறார்.

ஒரு காட்சியில் ரஜினியுடன் தன்ஷிகா ஓடி வருவது போல் ஒரு காட்சி எடுக்கப்பட்டது. அப்போது தன்ஷிகா தவறி கீழே விழுந்தார். அதனால் அந்த காட்சி மீண்டும் எடுக்கப்பட்டது.

அப்போதும் தன்ஷிகா ஓடிவரும் போது கீழே விழுந்தார். இதில் அவரது கால்மூட்டு, இடுப்பு எழும்பு ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. இதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதனால் அந்த காட்சியை எடுக்க முடியவில்லை. வேறொரு நாளில் அந்த காட்சியை படப்பிடிப்புக் குழுவினர் திட்டமிட்டனர்.

இது பற்றி தகவல் கூறிய படக்குழுவினர். தன்ஷிகா ரஜியியுடன் நடிக்க பயப்படுகிறார். இதனால் ஏற்பட்ட பதட்டம் காரணமாகத்தான் அவர் கீழே விழுந்தார் என்று கூறினார்கள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online