விஷாலின் அடுத்த அதிரடி ஆரம்பம்

Poojai-Movie-Reviewவிஷால் தற்போது ‘கதகளி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பொங்கலன்று இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், விஷாலின் அடுத்த படமான ‘மருது’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. ‘கொம்பன்’ இயக்குனர் முத்தையா இயக்கும் இந்த படத்தின் கதை கிராமத்து பின்னணியை கொண்ட ஆக்‌ஷன் படமாக உருவாக இருக்கிறது.

இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்க இருக்கிறார். ‘தாரை தப்பட்டை’ வில்லன் ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். மேலும் ராதாரவியும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார். டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online