விஜய் படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

velayudhamவிஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்து வருகிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘விஜய் 59’ என்று அழைத்து வருகிறார்கள்.

மேலும் போலீஸ் கதை என்பதால் ‘காக்கி’ என்று தலைப்பு வைக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் உறுதியாகாத நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அதிகாரப்பூர்வமான தலைப்பை வெளியிடவுள்ளனர்.

இதை இப்படத்தின் இயக்குனர் அட்லி வருகிற 26-ம்தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார். இது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online