தாரை தப்பட்டை பொங்கலுக்கு ரிலீஸாவது உறுதியானது

varalaxmi-sarathkumar-sasikumar_144367473730பாலா இயக்கத்தில் நீண்டகால தயாரிப்பில் இருக்கும் படம் ‘தாரை தப்பட்டை’ இப்படத்தில் சசிகுமார், வரலட்சுமி, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இளையராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்து, தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படம் பொங்கலுக்கு வெளிவரப் போவதாக சமீபத்தில் செய்திகள் பரவி வந்தது. ஆனால், இதுகுறித்து படக்குழுவினர் வாய் திறக்கவில்லை.

இந்நிலையில், தற்போது இப்படம் பொங்கலுக்கு வரவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இன்று வெளியான இப்படத்தின் போஸ்டரில் இப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவித்துள்ளனர்.

ஏற்கெனவே பொங்கல் ரேசில், விஷாலின் ‘கதகளி’, சுந்தர்.சியின் ‘அரண்மனை-2’, ஜெயம் ரவியின் ‘மிருதன்’, சூர்யாவின் ‘24’ ஆகிய படங்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries