அட்லி படத்தில் விஜய்க்கு மனைவியாக நடிக்கும் சமந்தா

Vijay, Samantha in Kathi Telugu Movie Stills

Vijay, Samantha in Kathi Telugu Movie Stills

விஜய் தற்போது அட்லி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு, விஜய்-எமிஜாக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர். இந்த படத்தில் மற்றொரு ஹீரோயினாக சமந்தாவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தில் விஜய்க்கு மனைவியாக எமிஜாக்சன் நடிக்கவிருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளிவந்தது. ஆனால், தற்போது, சமந்தாதான் விஜய்க்கு மனைவியாக நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

விஜய்க்கும் சமந்தாவுக்கும் திருமணமாகி குழந்தை பிறப்பதுபோல் ஒரு பாடலைக்கூட படமாக்கிவிட்டார்களாம். இவர்களின் குழந்தையாகத்தான் மீனாவின் மகள் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இப்படத்தில் பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன், பிரபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். கோடை விடுமுறையில் படத்தை வெளியிட மும்முரமாக பணியாற்றி வருகின்றனர்.

வருகிற 26-ந் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அன்றைய தேதியில் படத்தின் தலைப்பு என்ன என்பது தெரிந்துவிடும்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online