தமிழ் சினிமாவை ‘ஷேக்’ செய்த அபிஷேக் பச்சன், விஜயகாந்த் சந்திப்பு

1448262695-8658தீவிர அரசியலில் இறங்கிய பிறகு நடிப்பிலிருந்து விலகி இருந்த விஜயகாந்த், தனது மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும், தமிழன் என்று சொல் படத்தில் நடிக்கிறார். இந்த செய்தியே தமிழ் சினிமாவுக்கு ஆச்சரியம்தான்.

இதில் அமிதாப் பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சன் விஜயகாந்தையும், அவரது இரு மகன்களையும் சந்தித்து பேசியுள்ளார். இந்த திடீர் சந்திப்பு தமிழ் சினிமாவின் புருவங்களை உயரச் செய்துள்ளது.

என்னதான் முன்னணி நடிகராக இருந்தாலும் பிறமொழி படங்களில் விஜயகாந்த் நடித்ததில்லை. பிற மாநிலங்களில் நடக்கும் சினிமா நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்வதில்லை.

அப்படிப்பட்டவரை அபிஷேக் பச்சன் தேடி வந்து சந்திக்கிறார் என்றால், ஆச்சரியத்தின் அளவு அதிகமாகத்தானே செய்யும்.

இந்த சந்திப்பு குறித்து பேசிய அபிஷேக் பச்சன், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றார்.

விஜயகாந்த் தேசிய அரசியலுக்கு வருவதற்கான அறிகுறியா இந்த சந்திப்பு…?

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online