காதலுக்காக பச்சை குத்திக்கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை: ஓவியா

Oviya Helen Hot Stills (3)சிவா, அசோக் செல்வன், ஓவியா ஆகியோர் நடிக்க ஜி.மணிகண்டன் டைரக்ஷனில் சி.வி.குமார், அபினேஷ் இளங்கோவன் ஆகிய இருவரும் தயாரிக்கும் படம் ‘144’.

இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஓவியா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவருடைய வலது கை தோள்பட்டையில் பச்சை குத்தி இருப்பது பற்றி நிருபர்கள் கேட்டார்கள். அதற்கு பதிலளித்து ஓவியா கூறியதாவது:-

என் தோள்பட்டை அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக கடல்குதிரை ஓவியத்தை பச்சை குத்திக்கொண்டேன். இது எனக்கு அழகாக இருப்பதாக நிறைய பேர் பாராட்டுகிறார்கள்.

என் வலது கையின் தோள்பட்டையில் மட்டுமே நான் பச்சை குத்திக்கொண்டேன். வேறு எங்கும் பச்சை குத்திக்கொள்ளவில்லை. காதலுக்காக பச்சை குத்திக்கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை. மற்றவர்களுக்காக உடம்பை புண்ணாக்கி கொள்ளத்தேவையில்லை என்று கருதுகிறேன்.

இவ்வாறு நடிகை ஓவியா கூறினார்.

அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றிற்கு ஓவியா அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- காதலுக்காக பச்சை குத்திக்கொள்வதில் உடன்பாடு இல்லை என்று கூறுவது நயன்தாராவை தாக்குவது போல் இருக்கிறதே?

பதில்:- நான் நயன்தாராவை தாக்குவதற்காக இதை சொல்லவில்லை. எனக்கு உடன்பாடு இல்லை என்று தான் கூறினேன்.

கேள்வி:- மலையாள பட உலகில் இருந்து தமிழுக்கு வந்த நடிகைகளில் உங்களுக்கு நெருங்கிய தோழி யார்?

பதில்:- எனக்கு நெருங்கிய தோழர்களும் இல்லை, தோழிகளும் இல்லை. மற்ற கதாநாயகியை சந்திக்கும் போது ‘ஹலோ’ சொல்வதோடு சரி யாருடனும் நெருங்கிய நட்பு வைத்துக்கொள்வது இல்லை.

கேள்வி:- நீங்கள் ஒதுங்கிப்போகிற கூச்ச சுபாவம் கொண்டவரா?

பதில்:- எனக்கு கூச்ச சுபாவம் இல்லை அப்படி இருந்திருந்தால் சினிமாவுக்கு வந்திருக்க மாட்டேன். நான் எப்போதுமே சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற சுபாவம். சிரித்துக் கொண்டே இருப்பேன். எப்போதும் சிரித்த முகமாக இருக்கிறேனே என்று என்னைப் பார்த்து நிறையபேர் ஆச்சரியப்படுகிறார்கள்.

கேள்வி:- உங்களுக்கு காதல் அனுபவம் இருக்கிறதா?

பதில்:- நிறையபேர் என்னிடம் காதலை சொல்லியிருக்கிறார்கள் ஆனால், நான் யாருடைய காதலையும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனக்கு யார் மீதும் காதல் வரவில்லை. எதிர்காலத்தில் காதல் திருமணம் செய்து கொள்வேனா என்று இப்போது சொல்ல முடியாது.

மேற்கண்டவாறு ஓவியா பதிலளித்தார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries